Monday 12 August 2013

வெனிசுலா: மின்னல் தாக்கி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

வெனிசுலாவின் வடக்குப் பகுதியில் உள்ள புவேர்டோ லா குருஸ் என்ற நகரத்தில் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பாலை இயங்கி வருகிறது.

நேற்று மதியம் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மின்னல் ஒன்றினால் ஆலையின் ஒரு பகுதியில் வெடி விபத்துடன் தீப்பிடித்ததாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அச்ட்ருபால் சாவேஸ் தெரிவித்துள்ளார். நேற்று மாலை 3.15 மணி
அளவில் எண்ணெய் ஆலையின் வளாகத்திற்குள் இருந்த குளத்தில் முதலில் மின்னல் தாக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் யாருக்கும் காயமேற்படவில்லை என்று
தெரிவிக்கப்பட்டது. ஆயினும், பாதுகாப்பு காரணமாக அருகில் குடியிருந்த
அனைவரும் பத்திரமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதற்கு போராடிக்
கொண்டிருக்கின்றனர்.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிப்பதாக அரசு நிறுவனம் தெரிவிக்கின்றது. 1000-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலையில் பணி புரிவதாகவும் அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ இந்த மீட்புப் பணியினைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment