Monday 2 December 2013

லிபியாவின் சிறையிலிருந்து 40 கைதிகள் தப்பி ஓட்டம்

லிபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சபா நகரத்தின் சிறைக்கைதிகள் 40 பேர் துப்பாக்கி ஏந்தி வந்த வெளிமனிதர்களின் உதவியுடன் தப்பித்துள்ளனர் என்று நேற்று வெளிவந்த ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

நேற்றுமுன்தினம் அதிகாலை அந்த சிறைச்சாலைக்கு அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வந்துள்ளனர். சிறைச்சாலையின் முன்புறப்பகுதிகளில் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே வந்த அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளைத் தேடினர். அவர்களைக் கண்டுபிடித்ததும் அவர்களிலிருந்து பலரைக் கடத்திச் சென்றனர். சிறையின் இயக்குநர் நாசிர் ஷாபான் இத்தகவலைத் தெரிவித்தார். இவர்களில் பலர் மீண்டும் தாங்களாகவே திரும்பி வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

லிபியாவின் காவல்துறையினரும், ராணுவத்தினரும் தற்போது பயிற்சி முகாம்களில் ஈடுபட்டிருப்பதால் அங்கு இதுபோன்ற சிறைத் தகர்ப்பு சம்பவங்கள் நடைபெறுவது சகஜமாக இருக்கின்றது. இவர்களின் பாதுகாப்பிற்கு அரசு, புரட்சிப் போராளிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் லிபியாவின் அதிபர் முயம்மர் கடாபியைப் பதவியிலிருந்து இறக்க அரசு ராணுவத்திற்கு உதவி புரிந்த இத்தகைய தனியார் புரட்சி இயக்கங்கள் பல நேரங்களில் சட்டத்தினை மீறியும் செயல்பட்டுவருகின்றன. ஆனால், இத்தகைய இயக்கங்களை அரசால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை என்பதே பிரச்சினைக்குரிய விஷயமாகவும் இருக்கின்றது.

No comments:

Post a Comment