டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர்.
குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த முகாம் தொடங்கிய நான்கே நாட்களில் 12 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் வரை, வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சில மாநிலங்களில் உள்ள சுமார் 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்பட்டு வந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அரசியலையே வெறுத்து வந்த நடுநிலையாளர்கள் பலர் தங்கள் கட்சியில் தற்போது இணைவதை கண்டு ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபல சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும், கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷன், ‘ நாட்டில் தற்போது புதிய அரசியல் புரட்சி உருவாகியுள்ளது.
மாற்று அரசியலை உருவாக்கி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட மக்கள் அணிஅனியாக எங்கள் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.
2014- பாராளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவோம். எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பெயர் மற்றும் தொகுதிகள் கொண்ட முதல் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment